Saturday, May 10, 2008

Street Light - குறும்படம்



ஒரு ஏரியாவில் தெரு விளக்குகள் சில தினக்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் ஒருவர் தினமும் மின்சார வாரியத்திற்கு தொலைபேசியில் புகார் சொல்கிறார். சில தினங்கள் விடா முயற்சிக்கு பின்பு மின்வாரிய ஊழியர் வந்து தெருவிளக்கை சரி செய்துவிட்டு , அருகில் உள்ள ஒரு கடையில் உள்ள தொலை பேசியை பயன்படுத்தி அவர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கிறார். பேசிவிட்டு பணம் கொடுக்கிறார்.அப்போது அந்த கடையில் இருப்பவர் இந்த ஊழியருக்கு நன்றி தெரிவிக்கிறார். பணம் வாங்கவும் மறுக்கிறார். அதற்கு அந்த ஊழியர் தனக்கு நன்றி எதற்கு.. தினமும் தொலைபேசியில் புகார் சொன்னவருக்கு சொல்லுங்க என்றும் இது என் பணமல்ல அரசாங்க பணம் தான் என்றும் சொல்லி பணத்தை அந்த கடையின் பலகை மீது வைக்கிறார். அதற்கு அந்த கடைக்காரர் தொலைபேசியில் பேசியது தான் தான் என்று சொல்லி அந்த ஊழியர் வைத்த நாணயத்தை எடுக்க தேடுகிறார். அப்போது தான் அந்த ஊழியர் கடைக்காரரிடம் கேட்கிறார். உங்களால் பார்க்க முடியாதா என்று. கடைக்காரர் சிரித்துக் கொண்டே ஆமாம் என்று சொல்லி நாணயத்தை தேடுகிறார்.

ஊழியர் : ஆனா நீங்க தினமும் எங்களை அழைச்சிங்களே..
கடைக்காரர் : ஏன்னா... இருளின் வலி எனக்கு நல்லாவே தெரியும்.
....முற்றும்.... So Touching yaar.. :)

12 Comments:

SanJai said...

test.. :-)

SurveySan said...

kalakkal.

yaarunga mailesan? vera edhavadhu eduthirukkaaraa?

ச்சின்னப் பையன் said...

ரொம்பவே டச்சிங்... நல்லா இருந்தது....

பிரேம்ஜி said...

நல்ல குறும் படம்.பகிர்வுக்கு நன்றி.

SanJai said...

//SurveySan said...

kalakkal.

yaarunga mailesan? vera edhavadhu eduthirukkaaraa?//

அவர் யார்னு தெரியலை சர்வேசன். யூட்யூப்ல உலாத்திட்டு இருக்கும் போது கண்ல பட்டது. அவர் இந்த ஒரு படத்தை தான் வலையேற்றி இருக்கிறார்.

SanJai said...

//ச்சின்னப் பையன் said...

ரொம்பவே டச்சிங்... நல்லா இருந்தது..//

ஆமாம் சின்ன பையன். ரொம்ப டச்சிங் மட்டுமில்லை. யாரோ நமக்கு சூடு போட்ட மாதிரி ஒரு உணர்வும் கூட.

SanJai said...

//பிரேம்ஜி said...

நல்ல குறும் படம்.பகிர்வுக்கு நன்றி.//

வந்து கண்டு ரசித்ததற்கு நன்றி ப்ரேம்ஜி.

கப்பி பய said...

பகிர்வுக்கு நன்றி அண்ணாத்த!!

SanJai said...

//கப்பி பய said...

பகிர்வுக்கு நன்றி அண்ணாத்த!!//

உங்கள் பார்வைக்கு நன்றி அண்ணாத்த.. :)

தமிழன்... said...

நல்ல பகிர்வு சஞ்ஜய் நன்றி....

வடகரை வேலன் said...

நல்ல குறும் படம்.

//ஏன்னா... இருளின் வலி எனக்கு நல்லாவே தெரியும்//

உண்மை.

பகிர்ந்தமைக்கு நன்றி

mile said...

hi im mailesan rangswamy thnaks for liking my film my email id is mailesan@gmail.com in near future if want ot say you can mail me thank you